Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேரளாவில் மாஸ்க் கட்டாயம்!

கேரளாவில் மாஸ்க் கட்டாயம்!
, புதன், 29 ஜூன் 2022 (11:07 IST)
பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் மீண்டும் முகக்கவசத்தை கட்டாயமாக்க கேரளா அரசு முடிவு செய்துள்ளது. 

 
கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் சமீபத்தில் வேகமாக குறைந்து வந்தது. சமீபத்தில் 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த கொரோனா பாதிப்புகள் மீண்டும் வேகமாக உயரத் தொடங்கியுள்ளது. 
 
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,506 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,34,33,345 ஆக உயர்ந்தது. புதிதாக 30 பேர் இறந்துள்ளனர்.  இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,25,077 ஆக உயர்ந்தது.
 
கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 11,574 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,28,08,666 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 
 
குறிப்பாக கேரளாவில் தினசரி நோயாளிகள் எண்ணிக்கை 4,000 தாண்டியுள்ளது. இதனால், தற்போது கேரளாவில் மீண்டும் முகக்கவசத்தை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரியலூர் அருகே வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்!? – தேடி சென்ற மக்கள் ஏமாற்றம்!