சிவசேனா எம்.எல்.ஏக்கள் 50 பேர் எங்கள் வசம் உள்ளதாக ஏக்நாத் ஷிண்டே தகவல் தெரிவித்துள்ளார்.
அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், மாநில அமைச்சரவைக் கூட்டம் இன்று பிற்பகல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் உத்தவ் தாக்ரே காணோளியில் பங்கேற்கிறார்.
மகராஷ்டிரா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏக்களை வாஹாத்தியில் உள்ள ஓட்டலில் தங்க வைத்துள்ளார். இந்நிலையில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மும்பை வருகின்றனர். சிவசேனா எம்.எல்.ஏக்கள் 50 பேர் எங்கள் வசம் உள்ளதாக ஏக்நாத் ஷிண்டே தகவல் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள். தங்களை லட்சத்திற்கும் கோடிக்கும் விற்றுவிட்டனர். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சியினர் தங்களுக்கு துரோகம் செய்வார்கள் என பலர் எங்களிடம் கூறினர். ஆனால், சொந்த கட்சியினரே தங்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக உத்தவ் தாக்ரேவின் மகனும் அமைச்சருமான ஆதித்யா தாக்ரே வேதனை தெரிவித்துள்ளார்.