பள்ளிகளில் முதல் மற்றும் கடைசி பெஞ்ச்கள் என்பது பாகுபாட்டை ஏற்படுத்துவதாக உள்ளதாக ஒரு சினிமாவில் காட்சி இடம்பெற்ற நிலையில் கேரளாவில் உள்ள பள்ளிகளில் கடைசி பெஞ்ச்கள் இல்லா வகுப்பறைகள் அமைக்க பல பள்ளிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனவாம்.
சமீபத்தில் வெளியான ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன் என்ற படத்தில் பள்ளியில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு முதல் பெஞ்ச், குறைவாக படிக்கும் மாணவர்களுக்கு கடைசி பெஞ்ச் என்று வகுப்பறையில் உள்ள பாகுபாட்டை சுட்டிக்காட்டி பேசப்பட்டுள்ளது.
இதை முன்னொடியாய் எடுத்துக் கொண்ட பல பள்ளிகள் வகுப்பறையில் மேசைகளை ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக வைக்காமல், அரை வட்ட வடிவில் ஆசிரியர் குறுக்கே நடந்து சென்று வரும்படியாக அமைத்துள்ளார்களாம். இது மாணவர்கள் இடையேயான கற்றல் திறன் தொடர்பான பாகுப்பாட்டை போக்குவதோடு, ஆசிரியர் அனைத்து மாணவர்களையும் பாகுபாடின்றி கவனிக்கவும் உதவும் என கூறப்படுகிறது.
Edit by Prasanth.K