இன்றைய பாரத் பந்த் என்ற நாடு தழுவிய போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், பேருந்து ஓட்டுநர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக ஹெல்மெட் அணிந்து பேருந்து ஓட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில், பாதுகாப்பு கருதி கேரளா, மேற்கு வங்காளம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் பேருந்து ஓட்டுநர்கள் ஹெல்மெட் அணிந்து பேருந்து ஓட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளன. சில இடங்களில் போராட்டக்காரர்கள் ஓடும் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாகவும், எனவே தான் ஓட்டுநர்களுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேற்கு வங்காளம், ஒடிசா, கேரளா ஆகிய மாநிலங்களில் முழு அளவில் பாரத் பந்த் நடைபெற்று வருவதாகவும், கடைகள் மூடப்பட்டு போக்குவரத்து சரிவர இயங்காததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனாலும், வேலை நிறுத்த போராட்டத்தை மீறி சில இடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், பேருந்து ஓட்டுநர்களின் பாதுகாப்பு கருதி ஓட்டுநர்களுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டதாகவும், இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.