Publish Date: Mon, 30 May 2022 (11:40 IST)
Updated Date: Mon, 30 May 2022 (11:42 IST)
கடந்த மாதம் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக சென்செக்ஸ் உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது
இந்த நிலையில் இன்று சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்ததால் முதலீட்டாலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று சென்செக்ஸ் சுமார் 1130 புள்ளிகள் 56020 என்ற விலையில் சென்செக்ஸ் வர்த்தகமாகி வருகிறது
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 325 புள்ளிகள் உயர்ந்து 16 ஆயிரத்து 675 என்ற நிலையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை சென்செக்ஸ் உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது