Publish Date: Tue, 24 May 2022 (09:37 IST)
Updated Date: Tue, 24 May 2022 (09:46 IST)
கடந்த சில நாட்களாக மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் இன்று பங்குச்சந்தை மீண்டும் சரிந்துள்ளதால் முதலீட்டாளர்களுக்கு அதிருப்தி அளித்துள்ளது
நேற்று சென்செக்ஸ் ஆரம்பத்தில் உயர்ந்தாலும் இறுதியில் சற்றே சரிந்த நிலையில் இன்று மீண்டும் சுமார் 80 புள்ளிகள் சென்செக்ஸ் சரிந்துள்ளது. இதனை அடுத்து 54210 என்ற விலையில் சென்செக்ஸ் வர்த்தகமாகி வருகிறது
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 36 புள்ளிகள் உயர்ந்து 16 ஆயிரத்து 170 என்ற நிலையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை சென்செக்ஸ் சரிந்து வருவது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது