பாஜக ஆதரவாளர் கார்த்திக் கோபிநாத் அதிரடி கைது!
பாஜக ஆதரவாளரும் அரசியல் விமர்சகருமான கார்த்திக் கோபிநாத் என்பவர் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோவில் ஒன்றில் சித்திரைத் திருவிழா நடைபெற்றபோது சாமி சிலைகளை மர்ம நபர்கள் உட்டைத்ததாக புகார் வந்தது. இந்த புகாரை அடுத்து இரு தரப்பினருக்கு இடையே பிரச்சனை வந்தபோது மாற்று மதத்தினர் கோவில் சிலைகளை இடித்து தள்ளியதாக இந்து அமைப்பினர் புகார் அளித்தனர்
இந்த நிலையில் கார்த்திக் கோபிநாத் இணையத்தின் மூலம் நிதி வசூல் செய்து இந்த சாமி சிலைகளை புனரமைக்க போவதாக தெரிவித்திருந்தார். ஆனால் இந்த தொகையில் அவர் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த சென்னை ஆவடி போலீசார் கார்த்திக் கோபிநாத்தை கைது செய்துள்ளனர். அவரிடம் இது குறித்து விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன