Publish Date: Mon, 06 Jun 2022 (09:30 IST)
Updated Date: Mon, 06 Jun 2022 (09:31 IST)
கடந்த வாரம் பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் சென்செக்ஸ் புள்ளிகள் ஓரளவுக்கு உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் திருப்தி அடைந்தனர்.
இந்த நிலையில் இந்த வாரம் பங்கு சந்தையின் முதல்நாளே சென்செக்ஸ் இறக்கத்தில் இருப்பது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
சற்றுமுன் பங்குச்சந்தை தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 350 புள்ளிகள் சரிந்து 54 ஆயிரத்து 420 என்ற புள்ளியில் வர்த்தகமாகி வருகிறது
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி சுமார் 100 புள்ளிகள் குறைந்து 16485 என்ற புள்ளியில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
வாரத்தின் முதல் நாளிலேயே பங்கு சந்தை சரிவை அடைந்திருப்பது இந்த வாரம் முழுவதும் சரிவை ஏற்படுத்தும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது