Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கட்டுப்பாடிழந்து பள்ளத்தில் பாய்ந்த பேருந்து..! – சோகத்தில் முடிந்த பக்தி யாத்திரை!

Advertiesment
Char Dham Yatra
, திங்கள், 6 ஜூன் 2022 (09:22 IST)
உத்தரகாண்டில் சர்தாம் புனித யாத்திரை சென்ற பயணிகள் பேருந்து கவிழ்ந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்டின் உத்தர்காசி மாவட்டத்தில் யமுனோத்ரி கோவிலுக்கு நேற்று மாலை பக்தர்கள் பலர் பேருந்து ஒன்றில் சர்தாம் புனித யாத்திரை சென்றனர். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் பாய்ந்தது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 30 பேரில் 22 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

இந்த விபத்து சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதவெறுப்பு பேச்சு; இந்திய பொருட்களை புறக்கணிக்கும் சவுதி! – பாஜக உறுப்பினர் இடைநீக்கம்!