கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் இறக்கம்தான் மிகவும் அதிகமாக உள்ளது என்றும் இதனால் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து உள்ளார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தை நிலவரம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்த நிலையில் ஏற்ற இறக்கமின்றி சமநிலையில் உள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 20 புள்ளிகள் மட்டுமே சரிந்து 52,880 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 20 புள்ளிகள் மட்டுமே சார்ந்து 17,730 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது
ஆனால் நேரம் ஆக ஆக பங்குச் சந்தையில் மாற்றம் ஏற்படும் என்றும் ஏற்ற இறக்கத்துடன் தான் பங்குச்சந்தை முடியும் என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் கூறி வருகின்றனர்.