Publish Date: Mon, 04 Jul 2022 (09:31 IST)
Updated Date: Mon, 04 Jul 2022 (09:34 IST)
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணிகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சிகளில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் 1.6.2022 நிலவரப்படி காலியாகவுள்ள 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் கொண்டு நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு இன்று (04.07.2022) முதல் நாளை மறுநாள் (06.07.2022) மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் மாவட்ட கல்வி அலுவலர்களிடம் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தை சமர்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.