பங்குச்சந்தை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக ஒருநாள் ஏறினால் இரண்டு நாளில் இறங்குவதால் பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள் கடந்த சில மாதங்களாக நஷ்டம் அடைந்துள்ளனர்
இந்த நிலையில் நேற்று வந்த சுமார் 500 புள்ளிகள் இறங்கிய நிலையில் இன்று சுமார் 200 புள்ளிகள் அதிகரித்து முதலீட்டாளர்களுக்கு நிம்மதியைத் தந்துள்ளது
இன்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 200 புள்ளிகள் அதிகரிப்பு 53 ஆயிரத்து 254 என்ற புள்ளியில் வர்த்தகமாகி வருகிறது
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 50 புள்ளிகள் உயர்ந்து 15847 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தில் பங்குச்சந்தை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்