Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் வீழ்ச்சி அடைந்த இந்திய பங்குச்சந்தை: முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

மீண்டும் வீழ்ச்சி அடைந்த இந்திய பங்குச்சந்தை: முதலீட்டாளர்கள் அதிர்ச்சி
, திங்கள், 18 மே 2020 (19:25 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு ஆரம்பத்திலிருந்தே இந்திய பங்குச்சந்தை மற்றும் மும்பை பங்குச்சந்தை படுவேகமாக வீழ்ச்சியடைந்து வருவதால் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டம் அடைந்து உள்ளனர்
 
இந்த நிலையில் சமீபத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 20 லட்சம் கோடி திட்டத்தை அறிவித்தார். அதனை அடுத்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களும் அந்த திட்டங்கள் குறித்த விரிவான அறிக்கைகளை கடந்த 5 நாள்களாக அளித்து வந்தார் இதனால் இந்திய பங்குச் சந்தை உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது
 
ஆனால் நான்காவது கட்ட ஊரடங்கு தொடங்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று காலை சற்று ஏற்றத்துடன் தொடங்கிய மும்பை பங்கு சந்தை அதன்பின்னர் சரிவின் பாதையில் பயணம் செய்தது 
 
மத்திய அரசின் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதார ஊக்குவிப்பு சலுகைகள் முதலீட்டாளர்களை கவரவில்லை என்றும் அதனால்தான் பங்குச்சந்தை குறைய காரணம் என்றும் முதலீட்டாளர்கள் இடையே கருத்து பகிரப்பட்டு வருகிறது. இதனை அடுத்து இன்றைய வர்த்தக நேர முடிவில் 1069 புள்ளிகள் தேசிய பங்குச்சந்தை சென்செக்ஸ் சரிந்தது  குறியீட்டு எண் நிப்டி 311 புள்ளிகள் சரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஐடி துறை தவிர மற்ற அனைத்துத் துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகளும் குறைந்துள்ளது என்பதும், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 33 காசுகள் குறைந்து ரூ.75.91ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் 536 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று: சென்னையில் எவ்வளவு?