Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் 536 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று: சென்னையில் எவ்வளவு?

Advertiesment
தமிழகத்தில் 536 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று: சென்னையில் எவ்வளவு?
, திங்கள், 18 மே 2020 (18:39 IST)
தமிழகத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் சற்றுமுன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட தகவலின்படி இன்று தமிழகத்தில் 536 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 11760ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 536 பேர்களில் சென்னையில் மட்டும் 364 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7114ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 3 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 81ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 234 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதால் கொரோனாவில் இருந்து தமிழகத்தில் மொத்தம் குணமாகியவர்களின் எண்ணிக்கை 4406ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
webdunia
தமிழகத்தில் 536 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சம்பளத்தை குறைக்கும் கலி காலத்தில், கூட்டி கொடுத்த Asian Paints!!