பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்தித்த நிலையில், தமிழக பாஜக துணைத் தலைவர் குஷ்பு ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மையை உறுதிசெய்துள்ள நிலையில் இந்தியா கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்ஹ்டுள்ளது. இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து குஷ்பு தனது பதிவில், "வெற்றி பெற என்ன தேவை என்பதை அவர்கள் காட்டிவிட்டார்கள். காங்கிரஸ் படுதோல்வி அடைந்துவிட்டது. ராகுல் காந்தி அரசியலை விட்டு விலக இது மற்றுமொரு வாய்ப்பும் காரணமும் ஆகும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், "தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுவிட்டது. சில தலைவர்கள் வெற்றி பெறுவதற்காகவே பிறந்துள்ளனர். மக்களுக்கு அவர்கள் ஆற்றிய சேவை அவர்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவந்துள்ளது" என்றும் அவர் புகழ்ந்துள்ளார்.