கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கில் ஒவ்வொரு தளர்வாக அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று மெட்ரோ ரயில் மற்றும் பயணிகள் ரயில் அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது
இதனையடுத்து தற்போது மெட்ரோ ரயில் வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. செப்டம்பர் ஏழாம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் நிலையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து பார்ப்போம்
மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். இதனை மெட்ரோ ரயில் நிர்வாகம் உறுதிப்படுத்தவேண்டும். உடல் வெப்பநிலையை சோதனைக்கு பின்னரே பயணிகள் மெட்ரோ ரயில் நிலையத்தில் அனுமதிக்க வேண்டும்
கொரோனா தொற்று இல்லாத நபர்களை மட்டுமே மெட்ரோ ரயிலில் பயணிக்க அனுமதிக்க வேண்டும். மேலும் கொரோனா கட்டுப்பாடு பகுதிகளில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் திறக்கப்படாது. மேலும் தனி மனித இடைவெளியை பின்பற்றி மெட்ரோ ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மெட்ரோ ரயில் பணிகளுக்காக அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது