Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐந்து மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட கோயில்கள்: பக்தர்கள் மகிழ்ச்சி

ஐந்து மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட கோயில்கள்: பக்தர்கள் மகிழ்ச்சி
, செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (07:07 IST)
ஐந்து மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட கோயில்கள்
தமிழகத்தில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் கோவில்கள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்ததை அடுத்து இன்று அதிகாலை முதல் அனைத்து கோவில்கள் திறக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் இன்று கோயில்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளியுடன் நின்று சுவாமி தரிசனம் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
ஐந்து மாதங்களுக்கு பின்னர் இன்று முதல் கோவில்கள் திறக்கப்படுவதால் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். குறிப்பாக இன்று முதல் நாளிலேயே மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பெரிய கோவில்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது 
 
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மூடப்பட்டிருந்த கோவில் உள்பட அனைத்து வழிபாட்டு தலங்களும் மீண்டும் இன்று திறக்கப்பட்டுள்ளதால் அனைத்து பக்தர்களும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கோயில்கள் திறக்கப்படுவதற்கு ஒரு சில வழிகாட்டு நெறிமுறைகளையும் நேற்று தமிழக அரசு அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும் என்றும், பக்தர்களின் கைகளில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படவேண்டும் என்றும், உடல் வெப்பநிலை கண்டறியும் கருவி மூலம் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் பெரிய கோவில்களில் ஒரே நேரத்தில் 20 பக்தர்களுக்கு மேல் அனுமதி கிடையாது என்றும் கோவிலுக்குள் பக்தர்கள் கண்டிப்பாக ஒருவருக்கொருவர் 6 அடி இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது 
 
தேங்காய் பழம் பூ போன்ற பூஜை பொருள்களையும் கோயிலுக்குள் கொண்டு செல்ல வேண்டாம் என்றும் அங்கப்பிரதட்சனம் உள்பட்ட உள்ளிட்டவற்றை செய்ய வேண்டாம் என்றும் பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை கோவில் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலக கொரோனா பாதிப்பு 2.56 கோடி, பலி 8.54 லட்சம்: பரபரப்பு தகவல்