27 வருடம் முன்பும் விமான விபத்தில் காப்பாற்றிய சீட் நம்பர் 11A!? விமானத்தில் அந்த சீட்டுக்கு ஏக கிராக்கி!

Prasanth K
திங்கள், 16 ஜூன் 2025 (08:45 IST)

சமீபத்தில் அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் அனைவரும் பலியான நிலையில் ஒருவர் மட்டும் உயிர்பிழைத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

 

அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா 171 (போயிங் 787 ட்ரீம்லைனர் மாடல்) சில நொடிகளிலேயே மீண்டும் தரையில் மோதி வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் பலியான நிலையில் விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்ற ஒரு நபர் மட்டும் உயிர்பிழைத்தார். அவர் விமானத்தில் சீட் எண் 11ஏ வில் அமர்ந்திருந்தார்.

 

இந்த சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்திய நிலையில் தாய்லாந்தை சேர்ந்த பாடகர் ஒருவர் தனக்கு 27 ஆண்டுகள் முன்பு இதே போல நடந்த ஒரு சம்பவத்தையும், அதில் சீட் நம்பர் 11ஏ வுக்கு உள்ள தொடர்பையும் வெளிப்படுத்தியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தாய்லாந்தில் நடிகராகவும், பாடகராகவும் இருப்பவர் ருவாங்சக் லோய்ச்சுசக் (Ruangsak Loychusak). இவர் கடந்த 1998ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதியன்று தாய் ஏர்வேஸ் TG261 விமானத்தில் பயணித்துள்ளார். தெற்கு தாய்லாந்தில் இந்த விமானம் தரையிறங்க முயன்றபோது பெரும் விபத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 146 பேரில் 101 பேர் பலியானார்கள். மற்றவர்கள் கை, கால் முறிவு உள்ளிட்ட படுகாயங்களை அடைந்தனர். இந்த விபத்து ருவாங்சங் நல்வாய்ப்பாக பெரும் காயங்களின்றி உயிர் தப்பியுள்ளார். அந்த விபத்து ருவாங்சங் பயணித்த சீட் நம்பருக்கும் 11ஏ தான்.

 

இரு பெரும் விபத்துகளில் 11ஏ சீட்டில் அமர்ந்திருந்த இருவர் உயிர்பிழைத்த சம்பவம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ள அதேசமயம், விமான டிக்கெட் புக்கிங்கில் 11ஏ சீட் நம்பரை புக் செய்ய பெரும் போட்டிகள் எதிர்காலத்தில் ஏற்படலாம் என்றும், இதை சாக்காக கொண்டு விமான நிறுவனங்கள் அந்த சீட்டிற்கு மட்டும் கட்டணத்தை உயர்த்தி லாபம் பார்க்கலாம் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கதம் கதம்!.. வேற கேளுங்க!.. செங்கோட்டையன் பற்றி கேள்விக்கு எடப்பாடி பழனிச்சாமி ரியாக்‌ஷன்!...

தங்கம் விலை மாலையில் மீண்டும் உயர்வு.. இன்று ஒரே நாளில் ரூ.1440 உயர்ந்ததால் அதிர்ச்சி..!

ஒரே ஒரு மெயில் ஹேக் செய்து ரூ.2.16 கோடி மோசடி.. காவல்துறையின் துரித நடவடிக்கை..!

இடிக்கப்படுகிறது டெல்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம்.. என்ன காரணம்?

கஞ்சா போதை.. பெண்களை வீட்டிற்கே அழைத்து வந்த மகன்.. தந்தையே கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments