Publish Date: Tue, 19 Dec 2017 (20:21 IST)
Updated Date: Tue, 19 Dec 2017 (20:24 IST)
மத்தியப்பிரதேச மாநிலத்தில் கல்வி அமைச்சர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் டீ, ஸ்னாக்ஸ் பரிமாறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் பால்ராங் சமரோ என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் பல மாநிலங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். கல்வி அமைச்சர் விஜய் ஷா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணர்கள் டீ, ஸ்னாக்ஸ் பரிமாறியுள்ளனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விஜய் ஷா கூறியதாவது:-
நிகழ்ச்சியில் பணிபுரிய வேலையாட்கள் உள்ளனர். ஆனால் மாணவர்கள் இதுபோன்ற பணிகள் செய்தால் விருந்தோம்பல் பண்பு வளரும் என கூறினார்.
இதையடுத்து கல்வி அதிகாரி அஞ்சு பந்தோரியா கூறியதாவது:-
மாணவர்கள் உணவு பரிமாறுவது பாரம்பரிய நிகழ்ச்சியாகும். இருப்பினும் பள்ளி மாணவர்களை வேலை வாங்குவது தவறு என்பதால், அவர்கள் பரிமாறுவதை நிறுத்தி விட்டேன் என்று கூறினார். இருப்பினும் கல்வி அமைச்சர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களை வேலை வாங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.