Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சவுதி அரசுடன் கைகோர்க்கும் இண்டிவுட்!

சவுதி அரசுடன் கைகோர்க்கும் இண்டிவுட்!
, செவ்வாய், 19 டிசம்பர் 2017 (19:05 IST)
இண்டிவுட் சவுதி அரேபியா அரசுடன் இணைந்து உயர்தர சினிமா திரையரங்குகள் அமைக்கும் என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

 
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் உள்ள ராமோஜி திரைப்பட நகரில் டிசம்பர் 1ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை இண்டிவுட் திரைப்பட திருவிழா மிக பிரமாண்டமாக நடைபெற்றது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சார்ந்த என்.ஆர்.ஐ. தொழிலதிபர் சோஹன் ராய் தலைமையிலான இண்டிவுட் திட்டம் 2000 இந்திய பில்லியனர்கள் மற்றும் நிறுவனங்களால் ஊக்குவிக்கப்படுகிறது. 
 
இண்டிவுட் புதிதாக சர்வதேச தரத்தில் 10,000 4K மல்டிபிளக்‌ஷ் திரைகள், 1,00,000 2K/4K வீடு திரையரங்குகள், 8K/4K திரைப்பட ஸ்டூடியோக்கள், 100 அனிமேஷன் மற்றும் VFX ஸ்டூடியோக்கள், திரைப்பட கல்லூரி உள்ளிடவை தொடங்கும் நோக்கத்தில் உள்ளது. 
webdunia

 
இந்நிலையில் இண்டிவுட் தற்போது சவுதி அரேபியா நாட்டில் திரையரங்குகள் அமைக்கப்பட உள்ளதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சோஹன் ராய் கூறியதாவது:-
 
சவுதி அரேபியா அரசின் இந்த முடிவு அரபு நாடுகளில் பொழுதுபோக்கு தளத்தில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தும். சவுதியில் திரையரங்குகள் திறக்கப்படுவதால் இதுவரை படம் பார்க்க மற்ற நாடுகளுக்கு பறந்த மக்கள் இனி உள்நாட்டில் படம் பார்க்க அதிக அளவில் பணம் செலவிடுவார்கள்.
webdunia

 
இது வேலைவாய்ப்பு மற்றும் அரபு நாடுகளின் பொருளாதாரத்தை உயர்த்தும். இண்டிவுட், சவுதி அரேபியாவின் பொழுதுபோக்கு சந்தையை பயன்படுத்திக்கொள்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும் இண்டிவுட் சவுதி அரேபியா அரசுடன் இணைந்து உயர்தர சினிமா திரையரங்குகள் அமைக்கும் என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.167 கோடி அபேஸ்: வாடிக்கையாளர்களை ஏமாளியாக்கிய ஏர்டெல் பேமெண்ட் வங்கி!!