Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாதம் 44 ஆயிரம் சம்பளம்..! ரயில்வேயில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு! - முழு விவரம்!

Advertiesment
RRB Recruitment 2025

Prasanth K

, செவ்வாய், 29 ஜூலை 2025 (10:00 IST)

RRB எனப்படும் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் ரயில்வேயில் காலியாக உள்ள 434 மருத்துவ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

 

அதன்படி மருத்துவ கண்காணிப்பாளர், டயாலிசிஸ் டெக்னீசியன், சுகாதார இன்ஸ்பெக்டர் க்ரேடு 3, மருந்தகர், ரேடியோக்ராபர் எக்ஸ்ரே டெக்னீசியன், ஈசிஜி டெக்னீசியன், ஆய்வக உதவியாளர் க்ரேடு 2 உள்ளிட்ட 7 வகையான பணியிடங்களில் 434 பேர் பணியமர்த்தப்பட உள்ளனர். 

 

இந்த பணிகளுக்கான சம்பள விவரம்:

 

  • நர்சிங் கண்காணிப்பாளர் - ரூ.44,900
  • டயாலிசிஸ் டெக்னீசியன் - ரூ35,400
  • சுகாதார இன்ஸ்பெக்டர் (க்ரேடு 3) - ரூ.35,400
  • மருந்தகர் - ரூ.29,200
  • ரேடியோக்ராபர் எக்ஸ்ரே டெக்னீசியன் - ரூ.29,200
  • ஈசிஜி டெக்னீசியன் - ரூ.25,500
  • ஆய்வக உதவியாளர் (க்ரேடு 2) - ரூ.21,700

 

கல்வித்தகுதி: பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி பொது நர்சிங் படிப்பு, ஈசிஜி போன்றவற்றில் டிப்ளமோ என மாறுபடுகிறது. ஒவ்வொரு பணிக்குமான கல்வித்தகுதியை தேர்வு அறிவிப்பில் முழுமையாக காணலாம்

வயது வரம்பு: நர்சிங் கண்காணிப்பாளர் பணிக்கு 20 வயது முதல் 43 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மற்ற பணிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 36 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தவிர எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு உண்டு

 

விண்ணப்ப கட்டணம்: இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ500 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினர் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். தேர்வு எழுதிய பின் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு முழு தொகையும், பொதுப்பிரிவினருக்கு ரூ.400ம் திரும்ப அளிக்கப்படும்.

 

இந்த தேர்வானது கணினி வழித்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை என ஒவ்வொரு கட்டமாக நடைபெறும்

 

இந்த பணியிடங்களுக்கு ஆகஸ்டு 9ம் தேதி முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது. 

 

மேலதிக விவரங்களுக்கு https://www.rrbchennai.gov.in/ வலைதளத்தை காணவும்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யார் கையிலயும் காசு இல்ல.. டிஜிட்டல் பே மூலம் பிச்சை! அப்டேட் ஆன பிச்சைக்காரர்!