கேரளாவில் சபரிமலைக்கு சென்ற குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் ஹெலிகாப்டர் கான்க்ரீட்டில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு பயணத் திட்டங்களோடு கேரளா சென்றுள்ள இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று சபரிமலையில் ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்வதற்காக சென்றார். திருவனந்தபுரம் விமானநிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்ட அவர் நிலக்கல்லில் தரையிறங்குவதாக திட்டமிடப்பட்டது
ஆனால் மோசமான வானிலை காரணமாக அவரது ஹெலிகாப்டரை பிரமடம் மைதானத்தில் தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. அவ்வாறு அங்கு தரையிறக்கியபோது அவசரமாக போடப்பட்டிருந்த காங்கிரீட்டில் ஹெலிகாப்டர் சிக்கியது. இதனால் குடியரசு தலைவர் வெளியேற முடியாமல் ஹெலிகாப்டரிலேயே இருந்தார். பின்னர் ராணுவ வீரர்கள், காவலர்கள் ஹெலிகாப்டரை தள்ளி மீட்டனர்.
அதன் பின்னர் அங்கிருந்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இருமுடி கட்டிச் சென்று பம்பையில் நீராடி, ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்தார். ஹெலிகாப்டர் சிக்கிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Edit by Prasanth.K
A section of the helipad gave way when the chopper carrying President Droupadi Murmu touched down at Pramadam Stadium, Kerala. Police and fire personnel quickly intervened to stabilize and move the helicopter safely.#Kerala #DroupadiMurmu #HelicopterLanding #PramadamStadium… pic.twitter.com/zcUF9JhHmb
— Gulistan News (@GulistanNewsTV) October 22, 2025