கடந்த சில நாட்களாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மிகப்பெரிய அளவில் சரிந்து வருகிறது என்பதும் வரலாறு காணாத வகையில் தற்போது 79 ரூபாய்க்கும் அதிகமாகி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 70 ரூபாய் அளவில் இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக தினமும் சரிவடைந்து தற்போது 79 ரூபாய்க்கும் அதிகம் ஆகிவிட்டது.
சற்றுமுன் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 79 ரூபாய் 12 காசுகள் என வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. டாலருக்கான தேவை அதிகரித்துள்ளதால் அதன் மதிப்பு அதிகரித்து ரூபாய் மதிப்பு குறைந்து வருவதாக வர்த்தக வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பின் சரிவு ஏற்றுமதியாளர்களுக்கு லாபத்தையும் இறக்குமதியாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.