Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2500 கோடி ரூபாய் சம்பளம்… மன்னிப்புக் கடிதம் கொடிக்கும் டிஸ்னி? மீண்டும் ஜாக் ஸ்பேரோவாக ஜானி டெப்?

Advertiesment
2500 கோடி ரூபாய் சம்பளம்… மன்னிப்புக் கடிதம் கொடிக்கும் டிஸ்னி? மீண்டும் ஜாக் ஸ்பேரோவாக ஜானி டெப்?
, திங்கள், 27 ஜூன் 2022 (09:25 IST)
ஆம்பர் ஹெர்ட்டுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்ற நிலையில் நடிகர் ஜானி டெப்புக்கு மறுபடியும் படவாய்ப்புகள் குவியத் தொடங்குகின்றன.

நடிகர் ஜானி டெப், பிரபல நடிகையான ஆம்பர் ஹெர்ட்டை திருமணம் செய்துகொண்ட நிலையில், இரண்டு ஆண்டுகள் நல்லபடியாக சென்ற இவர்களது திருமண வாழ்க்கை அதன் பின்னர் விவாகரத்தில் முடிந்தது. 2017ல் இவர்கள் விவாகரத்து செய்துக் கொண்டார்கள். அதன்பின்னர் 2019ல் பத்திரிக்கை ஒன்றிற்கு கட்டுரை எழுதிய ஆம்பர் அந்த கட்டுரையில் ஜானி தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குறிப்பிட்டிருந்தார். மேலும் தான் குடும்பவன்முறையை எதிர்கொண்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். இது ஜானி டெப் மீது விமர்சனங்களை எழவைத்தது. அதன் காரணமாக அவர் நடித்த பல படங்களில் இருந்து நீக்கப்பட்டார்.

இதனால் அவருக்கு பட வாய்ப்பு குறைந்தது. இதனால் ஆம்பர் ஹெர்ட் தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதாக ஜானி டெப் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணை பல கட்டங்களாக நடந்த நிலையில் தற்போது தீர்ப்பு ஜானிக்கு ஆதரவாக வந்துள்ளது. மேலும் இழப்பீடாக ஆம்பர் ஹெர்ட் 15 மில்லியன் டாலர்கள் கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து இப்போது ஜானி டெப்புக்கு மறுபடியும் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன. அவரின் முத்திரைக் கதாபாத்திரமான பைரேட்ஸ் ஆஃப் தி கரேபியன் படத்தின் ஜாக் ஸ்பேரோ கதாபாத்திரத்தில் நடிக்க டிஸ்னி அவரை அனுகியுள்ளதாக சொல்லப்படுகிறது. முன்னதாக அவரை அந்த கதாபாத்திரத்தில் இருந்து நீக்கியதற்காக மன்னிப்புக் கடிதம் கொடுத்து, சம்பளமாக 301 மில்லியன் டாலர்கள் கொடுக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்திய மதிப்பில் இந்த தொகை 2500 கோடி ரூபாய்க்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.400 கோடி கிளப்பில் இணைந்தது கமலின் விக்ரம்!