ஆன்லைனில் மருந்து வியாபாரம் செய்ய பொதுவாக மெடிக்கல் ஷாப் ஓனர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். ஆனால் Repill என்ற புதிய தளத்தைத் தொடங்கியுள்ள டெல்லியைச் சேர்ந்த ரஜத் குப்தாவுக்கு மெடிக்கல் ஷாப் ஓனர்கள் ஆதரவு அளித்துள்ளனர். ஏனெனில் இவர் தனக்கு வரும் ஆர்டர் மருந்துகளை மெடிக்கல் ஷாப்பில் தான் வாங்கி சப்ளை செய்கிறார். இதனால் மெடிக்கல் ஷாப்களுக்கு வியாபாரம் அதிகரித்துள்ளது.
2023ல் அமெரிக்க வேலைவிட்டுத் தாய்நாட்டுக்குத் திரும்பிய ரஜத், 2024 ஜனவரியில் Repill என்ற புது தளத்தை தொடங்கினார். இந்த தளம் மெடிக்கல் பொருட்களை டோர் டெலிவரி செய்யும் நிறுவனமாக இருந்தது.
வாடிக்கையாளர்கள் மருத்துவர் பரிந்துரையுடன் மருந்துகளை ஆர்டர் செய்யலாம். அல்லது பரிந்துரை இல்லாத மாத்திரைகள், சிரப் போன்ற பொருட்கள் போன்றவை நேரடியாக ஆர்டர் செய்யலாம். 60 நிமிடங்களுக்குள் மருந்துகள் உங்கள் வீட்டு வாசலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.
இப்போது டெல்லியில் செயல்படும் Repill, 400-க்கும் மேற்பட்ட ஆர்டர்களை வெற்றிகரமாக டெலிவரி செய்துள்ளது. நொய்டா, குர்கான், பெங்களூர், மும்பை உள்ளிட்ட நகரங்களிலும் விரைவில் துவங்க திட்டமிடப்பட்டிருக்கிறது.