டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் உயிரிழந்த ஒன்பது பேரில், உத்தரப்பிரதேச மாநிலம் அமரோஹாவை சேர்ந்த அசோக் குமார் என்பவரும் ஒருவர். டெல்லி போக்குவரத்து கழக நடத்துனராகவும், இரவில் பாதுகாவலராகவும் பணிபுரிந்த அசோக் குமாரே எட்டு பேர் கொண்ட தனது குடும்பத்தின் ஒரே வருமானம் ஈட்டுபவர்.
சம்பவம் நடந்தபோது, அசோக் பணி முடிந்து திரும்பியிருக்கலாம். அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் தற்போது காணவில்லை. தனது மகனின் உடலை பார்த்து அமர் கடாரியாவின் தந்தை கதறியது மருத்துவமனை வெளியே சோகத்தை ஏற்படுத்தியது.
அசோக் குமாரின் உறவினரான லோகேஷ் குமார் குப்தாவை சாந்தினி சவுக் மெட்ரோவில் இருந்து அழைத்து வர அசோக் காத்திருந்த நிலையில், அசோக் உயிரிழக்க, லோகேஷ் குமார் குப்தா இதுவரை காணாமல் போயுள்ளார்.
ஹரியானா பதிவு எண் கொண்ட காரில் நடந்த இந்த வெடிவிபத்து, பயங்கரவாத சதியாக இருக்கலாம் என்ற கோணத்தில் UAPA சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஃபரிதாபாத்தில் 2,900 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட அதே நாளில் இந்தத் தாக்குதல் நடந்தது குறிப்பிடத்தக்கது.