உத்தரபிரதேச மாநிலத்தில் சம்பா மாவட்டத்தின் எல்லையில், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி காவல்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தில் சம்பா மாவட்டத்தில், முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட இஸ்லாமிய மத வழிபாட்டு தளம் இதற்கு முன்பு இந்துமத கடவுள் வழிபாட்டுத்தலமாக இருந்ததாகவும், இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.
இதனை அடுத்து, இஸ்லாமிய மத வழிபாட்டு தளத்தில் ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி, அங்கு அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த பகுதி இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டம் வன்முறையாக மாறி, நான்கு பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், வன்முறையால் பாதிக்கப்பட்ட சம்பா நகருக்கு ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இன்று செல்வதாக இருந்தனர். ஆனால், அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
தடையை மீறி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி செல்ல முற்பட்டபோது, சம்பா மாவட்ட எல்லை அருகே அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.