Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அணையை திறக்கும் முன் 5 முறை எச்சரிக்கை விட்டோம்: அமைச்சர் துரைமுருகன் விளக்கம்..!

அணையை திறக்கும் முன் 5 முறை எச்சரிக்கை விட்டோம்: அமைச்சர் துரைமுருகன் விளக்கம்..!

Mahendran

, செவ்வாய், 3 டிசம்பர் 2024 (13:23 IST)
சாத்தனூர் அணையை முன்னெச்சரிக்கை இல்லாமல் திறந்து விட்டதால்தான் விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டிய நிலையில் சாத்தனூர் அணையை திறப்பதற்கு முன் ஐந்து முறை வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டதாக அமைச்சர் துரைமுருகன் விளக்கம் சொல்கிறார்.
 
எந்தவிதமான அறிவிப்பும் இன்றி நள்ளிரவில் சாத்தனூர் அணை திறக்கப்பட்டதாக எடப்பாடி பழனிச்சாமி, டாக்டர் ராமதாஸ் உள்ளிட்டோர்  குற்றம் சாட்டியிருந்த நிலையில் அதற்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென விநாடிக்கு 1.68 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றியதால் 4 மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர் என உண்மைக்கு மாறான தகவல் பரப்பப்படுகிறது.
 
சாத்தனூர் அணை திறப்பின் போது 5 முறை வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடப்பட்டன. அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. 5வது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு டிச.,2ல் 1.80 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது.
 
அதிகப்படியான மழையின் காரணத்தைப் புரிந்து கொள்ளாமல் பொய்யான தகவலைப் பரப்புக்கின்றனர். சாத்தனூர் அணைக்கு ஆபத்து ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு செயல்பட்டது. அணைக்கு ஆபத்து ஏற்பட்டிருந்தால் உயிர்சேதத்தை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. அணை திறப்பின் மூலம் பெரிய பாதிப்போ, உயிரிழப்போ ஏற்படாமல் அரசு மக்களை பாதுகாத்தது.
 
அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் குறித்து அடுத்தடுத்து எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. இதனையெல்லாம் புரிந்து கொள்ளாமல் உயிர்கள் விஷயத்திலும் எதிர்க்கட்சிகள் மனசாட்சியை அடகு வைத்துவிட்டு அவதூறுகளை மட்டும் அள்ளி வீசுகின்றன. பொய்கள் என்றுமே விலை போகாது. 
 
இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வட தமிழகத்தை புயல்கள் அடிக்கடி தாக்குவது ஏன்? தென் தமிழகம் தப்பிக்க இலங்கை காரணமா?