Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கஞ்சா வியாபாரிகளோடு தொடர்பு? மன்சூர் அலிகான் மகன் கைது!

Advertiesment
Mansoor ali khan son

Prasanth Karthick

, புதன், 4 டிசம்பர் 2024 (10:45 IST)

பிரபல நடிகரான மன்சூர் அலிகானின் மகன் கஞ்சா வியாரிகளோடு தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

தமிழ் சினிமாவில் 90களில் பிரபலமான வில்லன் நடிகராக இருந்தவர் மன்சூர் அலிகான். தற்போதும் தொடர்ந்து சொந்தமாக சில படங்களை நடித்து வருவதுடன், முக்கியமான படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களிலும் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் ’தமிழ் தேசியப் புலிகள்’ என்ற கட்சியையும் தொடங்கி நடத்தி வருகிறார்.

 

இவரது மகன் அலிகான் துக்ளக் தற்போது ஹீரோவாக ஒரு படம் நடித்து வருகிறார். அந்த படத்தை மன்சூர் அலிகானே தயாரிக்கிறார். 

 

சமீபத்தில் ஜே.ஜே.நகர் போலீஸார் போதைப்பொருள் விற்பனை குற்றச்சாட்டில் முக்கிய நபர்கள் 10 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக் உள்பட 4 பேரின் பெயர்களை அவர்கள் கூறியுள்ளனர்.

 

அதன் அடிப்படையில் நேற்று அலிகான் துக்ளக்கை விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்றனர். இரவு முழுவதும் விசாரணை நடந்த நிலையில் தற்போது அலிகான் துக்ளக் உள்ளிட்ட 4 பேரையும் போலீஸார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கலகலப்பு 3 படத்தில் நடிக்கப் போகும் நடிகர்கள் இவர்கள்தான்… வெளியான தகவல்!