Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானத்தை கண்டுபிடித்தது ரைட் சகோதரர்கள் அல்ல.. அதற்கு முன்பே புஷ்பக விமானம்' இருந்தது.. சிவராஜ் சிங் சவுகான்

Mahendran
செவ்வாய், 26 ஆகஸ்ட் 2025 (10:35 IST)
விமானத்தை கண்டுபிடித்தவர்கள் ரைட் சகோதரர்கள் அல்ல, அவர்களுக்கு முன்னரே இந்தியாவில் 'புஷ்பக விமானம்' இருந்தது என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். 
 
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சிவராஜ் சிங் சவுகான், பண்டைய மகாபாரத காலத்தில் தொழில்நுட்ப ரீதியில் இந்தியா மிகவும் முன்னேறிய நாடாக இருந்தது.
 
இன்று நம்மிடம் இருக்கும் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நம்மிடம் இருந்தன. இதையெல்லாம் நாம் மகாபாரதத்தில் படித்திருக்கிறோம். நமது நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே வளர்ச்சியடைந்து விட்டது.
 
மேலும்,  மாணவர்கள் மற்றும் இளம் தொழில் வல்லுநர்கள் வெளிநாடுகளில் வாய்ப்புகளை தேடுவதை விட, நாட்டின் வளர்ச்சிக்கு தங்கள் திறமைகளை வழங்க வேண்டும். சிலிக்கான் பள்ளத்தாக்கு போன்ற உலகளாவிய தொழில்நுட்ப மையங்களில் உள்ள சிறந்த திறமையாளர்களில் கணிசமானவர்கள் இந்தியர்கள்தான். பட்டதாரிகள் தங்கள் திறமைகளை நாட்டின் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்த வேண்டும்" என்று அவர் கேட்டுக்கொண்டார்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவிடம் கெஞ்சுவதற்கு பதில் நாமே சாப்பிடலாம்: இறால் வளர்ப்பு நிபுணர்கள் கருத்து..!

கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறை..! பொறியியல் இடங்களில் 80% மாணவர் சேர்க்கை..!

இந்தியாவில் அணுகுண்டு வீசுங்கள்! அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் கடைசி வீடியோ!

TNPSC குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு.. முதன்மை தேர்வு தேதியும் அறிவிப்பு..!

மதுரையில் 2 அமைச்சர்கள் இருந்தும் மக்களுக்கு பயனும் இல்லை: செல்லூர் ராஜூ

அடுத்த கட்டுரையில்
Show comments