மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தனது மனைவியை மறந்துவிட்டு அவசரத்தில் விமானத்தில் ஏறியதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
சிவராஜ் சிங் சவுகான் தனது மனைவியுடன் குஜராத்திற்கு ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். குஜராத்தில் உள்ள கோவில்கள் உட்பட பல இடங்களுக்கு சென்ற அவர், ஒரு ஓய்வு விடுதியில் தனது மனைவியை தங்க வைத்துவிட்டு, ஒரு ஆராய்ச்சி மையம் ஒன்றுக்கு சென்றார்.
அங்குப் பெண்களுடன் கலந்துரையாடி கொண்டிருந்த நிலையில், திடீரென தனது விமானத்திற்கு கால தாமதம் ஆகிவிட்டது என்பதை உணர்ந்தார். உடனடியாக சூரத் விமான நிலையத்திற்கு காரில் வேகமாக சென்று கொண்டிருந்தார்.
சிவராஜ் சிங் சவுகான் சூரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த நிலையில், சுமார் 10 நிமிடங்கள் கழித்துதான் தனது மனைவி ஞாபகம் வந்தது. அவரை தங்கும் இடத்திலேயே விட்டுவிட்டு வந்திருப்பது நினைவுக்கு வந்தவுடன், உடனடியாக தனது மனைவிக்கு தொலைபேசி மூலம் அழைத்தார். பின்னர், தனது ஓட்டுநரிடம், "உடனடியாக எனது மனைவி இருக்கும் இடத்திற்கு காரைத் திருப்புங்கள்" என்று கூறினார். அதன் பிறகு அவர் தனது மனைவியை அழைத்துக்கொண்டு சூரத் விமான நிலையத்திற்கு சென்றார்.