மங்களூரை சேர்ந்த 79 வயது மூதாட்டி ஒருவர், 'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடி வலையில் சிக்கி, காவல்துறை அதிகாரி போல பேசிய மர்ம நபரிடம் தனது சேமிப்பான ₹17 லட்சத்தை இழந்தார்.
அக்டோபர் 23 அன்று, மோசடியாளர்கள் மூதாட்டியை மிரட்டி, ஐந்து மணி நேரம் கழித்து பணத்தை தங்கள் கணக்குக்கு மாற்றினர்.
மாலை 6 மணிக்கு பக்கத்து வீட்டுக்காரர் மூலம் மூதாட்டி உடனடியாக 1930 அவசர எண்ணுக்குப் புகார் அளித்தார். சைபர் குற்றப் பிரிவு அதிகாரிகள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு, வங்கி கணக்குக்கு மாற்றப்பட்ட பண பரிமாற்றத்தை நிறுத்தி, மோசடியாளரின் கணக்கை உடனடியாக முடக்கினர். அடுத்த நாளே நீதிமன்ற உத்தரவு பெற்று முழு பணத்தையும் மூதாட்டியின் கணக்கிற்கு மீட்டனர்.
மோசடி நடந்தது என்று அறிந்தவுடன் விரைவாக புகார் அளித்தால் மட்டுமே இழந்த பணத்தை மீட்க முடியும் என அதிகாரிகள் வலியுறுத்தினர்.