மாநிலங்களவை உறுப்பினரும், இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷனின் முன்னாள் தலைவருமான சுதா மூர்த்தி, இணையவழி மோசடி கும்பலிடம் சிக்கியுள்ளார். இச்சம்பவம் குறித்து அவர் சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
செப்டம்பர் 5-ஆம் தேதி சுதா மூர்த்தியின் கைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. தொலைத்தொடர்பு துறை ஊழியர் என்று கூறிக்கொண்ட ஒருவர், அவரது செல்போன் எண் ஆதார் அட்டையுடன் இணைக்கப்படவில்லை என்றும், அவரது ஆபாசமான காணொளிகள் இணையத்தில் பரவி வருவதாகவும் தெரிவித்தார். மேலும், இதனால் அவரது செல்போன் சேவைகள் விரைவில் நிறுத்தப்படும் என்றும் மிரட்டியுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து, சுதா மூர்த்தியின் புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. குற்றவாளிகள் மீது தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தச் செய்தி, பொதுமக்களுக்கு, குறிப்பாக பிரபலங்களுக்கு, இணையவழி மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.