பீகாரில் ராகுல்காந்தி பேரணி நடத்தி வரும் நிலையில் அங்கு பாகிஸ்தான் தீவிரவாதிகள் நுழைந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பலியான நிலையில், அதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை நடத்திய இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாமை குண்டு வீசி அழித்தது.
பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் அதற்கு பதிலடியாக இந்தியாவில் ஊடுருவி அசம்பாவிதங்கள் ஏற்படுத்த முயலலாம் என உளவுத்துறை எச்சரித்திருந்தது. இந்நிலையில் தற்போது பீகாருக்குள் நேபாளம் வழியாக 3 தீவிரவாதிகள் நுழைந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த இந்த மூன்று பயங்கரவாதிகளின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ள பீகார் காவல்துறை அவர்களை தீவிரமாக தேடி வருகிறது.
தற்போது வாக்கு திருட்டுக்கு எதிராக பீகாரில் ராகுல்காந்தி பேரணி நடத்தி வரும் நிலையில், இந்த பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக அவரது பயண திட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Edit by Prasanth.K