பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தை இந்திய பயனர்கள் பார்க்க முடியாத வகையில் மத்திய அரசு முடக்கி வைத்துள்ளதாக கூறப்படும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பெஹல்காம் என்ற பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பே காரணம் என்று கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக இந்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவிலுள்ள பாகிஸ்தான் தூதர்கள் வெளியேற வேண்டும் என்றும், 48 மணி நேரத்தில் இந்தியாவில் வந்த பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் உள்பட பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், பாகிஸ்தான் அரசின் அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தின் கணக்கை இந்திய பயனர்கள் பார்க்க முடியாத வகையில் மத்திய அரசு முடக்கி வைத்துள்ளது. மேலும், பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இரு நாடுகளுக்கு மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.