Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பயங்கரவாதத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்! - காஷ்மீர் தாக்குதல் குறித்து சத்குரு பதிவு!

Advertiesment
sadhguru

Prasanth Karthick

, வியாழன், 24 ஏப்ரல் 2025 (10:50 IST)

”காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாதுகாப்புப் படைகள், அவர்களின் கடமைகளைச் செய்ய அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்” என சத்குரு கூறியுள்ளார்.

 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில்  தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உள்பட 26  அப்பாவி  பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

 

நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள இந்தத் தாக்குதல் குறித்து சத்குரு அவர்கள், தனது எக்ஸ் தளப் பதிப்பில் கூறியிருப்பது: 

 

பயங்கரவாதத்தின் நோக்கம் போர் அல்ல, ஆனால் ஒரு சமூகத்தை அச்சத்தால் முடக்குவது. பீதியைப் பரப்புவதும், சமூகத்தைப் பிளவுபடுத்துவதும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தடம் புரளச் செய்வதும், ஒவ்வொரு மட்டத்திலும் சட்டமின்மையை உருவாக்குவதும் தான் அதன் நோக்கமாகும். 

 

நம் தேசத்தின் இறையாண்மையை பாதுகாக்கவும், வளர்க்கவும் விரும்பினால், பயங்கரவாதத்தை இரும்புக் கரத்துடன், உறுதியான நீண்டகால தீர்மானத்துடனும் கையாள வேண்டும். 

 

கல்வி, பொருளாதாரம், சமூக நலன் என அனைத்து மட்டங்களிலும் அனைவருக்கும் சம பங்கீடு வழங்குவது நீண்ட கால தீர்வை கொடுக்கும்.

 

ஆனால், இப்போதைக்கு, மதம், சாதி, அல்லது அரசியல் தொடர்புகள் ஆகியவற்றின் அனைத்து குறுகிய பிளவுகளுக்கும் அப்பால் ஒரு தேசமாக ஒன்றாக நிற்பதும், நமது பாதுகாப்புப் படைகளுக்கு அவர்களின் கடமைகளைச் செய்ய அனைத்து மட்டங்களிலும் ஆதரவளிப்பதும் மிகவும் முக்கியமானது. 

 

இங்கு தாக்குதலில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்த அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள்.

 

இவ்வாறு சத்குரு பதிவிட்டுள்ளார்.

 

Edit by Prasanth.K

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி! தீவிரவாதிகள் ராணுவம் இடையே துப்பாக்கிச்சூடு! - காஷ்மீரில் பரபரப்பு!