Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பஹல்காம் தாக்குதலுக்கு லஷ்கர்-ஏ-தொய்பா தளபதி உதவி: என்ஐஏவுக்கு கிடைத்த ஆதாரம்..!

Advertiesment
பயங்கரவாதம்

Siva

, வியாழன், 1 மே 2025 (09:34 IST)
பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக நடத்திய விசாரணையில், பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகளுக்கு, ஜம்மு-காஷ்மீரில் உள்ள லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் முன்னணி உறுப்பினர் பரூக் அகமது மற்றும் அவரது ஆதரவாளர்கள் துணை புரிந்திருக்க வாய்ப்பு இருப்பது தெரியவந்துள்ளது என்று தேசிய புலனாய்வு முகமை  தெரிவித்துள்ளது. இதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

பஹல்காமில் 26 பேரை கொன்ற தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்புப் படையினர் காஷ்மீரின் பல பகுதிகளில் அதிரடி சோதனைகள் நடத்தினர். இதில், தரைமட்டமாக்கப்பட்ட 10 கட்டடங்களில் பரூக் அகமதுவின் வீடும் அடங்குகிறது. 1996 ஆம் ஆண்டிலிருந்து பாகிஸ்தானில் ஒளிந்து வாழ்ந்து வரும் இவர், இந்திய எல்லையை கடந்தும் பலமுறை பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தடை செய்யப்பட்ட லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பில் முக்கிய பதவி வகித்த இவர், 2016 ஆம் ஆண்டு வரை இந்தியாவுக்கு எதிரான செயல்களில் தொடங்கியவராக சந்தேகிக்கப்படுகிறார். ஜம்மு-காஷ்மீர் நிலப்பரப்பை மிக நன்கு தெரிந்தவர் என்பதால், கடந்த இரண்டு ஆண்டுகளாக பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து இந்தியாவில் உள்ள பயங்கரவாத நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பஹல்காம் தாக்குதலும், அவரது திட்டங்களில் ஒன்றாக இருக்கலாம் என அதிகாரிகள் கருதுகின்றனர்.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

14 வருடங்கள் கழித்து மதுரையில் கால் வைக்கும் விஜய்! விமான நிலையத்தில் குவிந்தது கூட்டம்!