ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முன்னாள் பயங்கரவாதிகளாக இருந்தவர்களை திருமணம் செய்த பாகிஸ்தானை சேர்ந்த 60 பெண்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்ற தகவல் வந்துள்ளது.
பெஹல்காம் தாக்குதலுக்கு பின் இந்தியாவில் உள்ள அனைத்து பாகிஸ்தானியர்கள் வெளியேற வேண்டும் என்று அதிரடியாக இந்தியா உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அந்நாட்டில் உள்ள இந்தியர்கள் விரைவில் தங்களது தாயகம் திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகர், பாராமுல்லா உள்பட சில மாவட்டங்களில் பாகிஸ்தானியர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் அழைத்து வரப்பட்டு, வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டனர்.
இந்த நிலையில், முன்னாள் பயங்கரவாதிகளை திருமணம் செய்து தற்போது ஜம்மு காஷ்மீரில் குடும்பத்துடன் வாழ்ந்து வருபவர்களையும் பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்டதாகவும், இதுவரை 60 பயங்கரவாதிகளை திருமணம் செய்து கொண்ட பெண்கள் நாடு கடத்தப்பட்டதாகவும் ஜம்மு காஷ்மீர் மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது.