Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மைசூர் பாக்ல கூட ‘PAK’ வரக்கூடாது! மைசூர் ஸ்ரீ என பெயர் மாற்றிய ஸ்வீட் கடைகள்!

Advertiesment
Mysore pak

Prasanth Karthick

, வெள்ளி, 23 மே 2025 (15:23 IST)

பாகிஸ்தான் உடனான போருக்கு பிறகு பல்வேறு வகையில் பாக்-கை புறக்கணித்து வரும் மக்கள் இனிப்பின் பெயரிலிருந்தும் பாக்-ஐ நீக்கியுள்ளது வைரலாகியுள்ளது.

 

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தானுடனான வணிகம் உள்ளிட்ட பலவற்றை இந்திய மக்கள் புறக்கணித்துள்ளனர். இந்தியாவில் பாகிஸ்தான் கொடி உள்ளிட்ட பொருட்களை விற்க தடை விதித்து அமேசன், ப்ளிப்கார்ட் உள்ளிட்ட இகாமர்ஸ் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

 

ராஜஸ்தான், குஜராத் வியாபாரிகள் பலர் பாகிஸ்தானுக்கு உதவியதற்காக துருக்கியுடனான வணிகத்தை புறக்கணித்தனர். இந்த புறக்கணிப்பு இன்னும் ஒரு படி மேலே போய் பாகிஸ்தான் பெயரை நினைவுப்படுத்தும் பொருட்களின் பெயரையே மாற்றும் அளவிற்கு சென்றுள்ளது.

 

பாகிஸ்தானை பொதுவாக சுருக்கமாக ‘பாக்’ என்று அழைப்பது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் ஜெய்ப்பூரில் மைசூர் பாக் என்று இனிப்பை வாங்க பெயரை சொல்லும்போது கூட ‘பாக்’ என்ற பெயர் அசௌகர்யம் தருவதாக வாடிக்கையாளர்கள் புகார் அளித்ததாக கூறியுள்ள த்யோஹர் ஸ்வீட்ஸ் என்ற ஸ்தாபனம், மைசூர் பாக்கிலிருந்து பாக்கை நீக்கிவிட்டு ஸ்ரீயை சேர்த்துள்ளனர்.

 

மேலும் மைசூர் பாக், மோதி பாக், ஆம் பாக், கோந்த் பாக் என்ற இனிப்புகளின் பெயர்களில் எல்லாம் பாக் என்ற பெயருக்கு பதிலாக ஸ்ரீ என்ற பெயரை சேர்த்துள்ளனர். மேலும் சில இனிப்பகங்களிலும் இவ்வாறாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

8 மாவட்டங்களுக்கு காத்திருக்குது கனமழை! வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!