மைசூர் மகாராஜா குடும்பத்திற்கு ரூ.3400 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என கர்நாடக மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு, பெங்களூரில் சாலை விரிவாக்க பணிகளுக்காக மைசூர் மகாராஜா அரச குடும்பத்திற்குச் சொந்தமான 15.39 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மைசூர் மகாராஜா குடும்பத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
சாலை விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட 15.39 ஏக்கர் நிலத்திற்கு ரூ. 3,400 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கர்நாடகா அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த இழப்பீடு தொகையை "TDR" எனப்படும் மாற்றக்கூடிய மேம்பாட்டு உரிமை (Transferable Development Rights) வடிவில் வழங்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
15.39 ஏக்கர் நிலத்திற்கு ரூ.3400 கோடி என்றால், கிட்டத்தட்ட ஒரு சென்ட் நிலத்திற்கே ரூ. 2 கோடி 22 லட்சம் ஆகும். இதனால், மைசூர் அரச குடும்பம் 'ஜாக்பாட்' அடித்துவிட்டதாகவே சொல்லப்படுகிறது.