Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தண்ணீரை நிறுத்தினால், உங்க மூச்சை நிறுத்தி விடுவோம்! - இந்தியாவை மிரட்டும் பாக். ஜெனரல்!

Advertiesment
Indus Water Treaty

Prasanth Karthick

, வெள்ளி, 23 மே 2025 (13:43 IST)

சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்துள்ளது குறித்து பாகிஸ்தான் லெப்டினெண்ட் ஜெனரல் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.

 

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி கொடுத்தது. அதற்கு முன்னதாக இந்தியா - பாகிஸ்தான் இடையேயான முரண்பாடுகள் அதிகரித்த நிலையில், இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு பகிரப்படும் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது. பாகிஸ்தானின் 80 சதவீத நீர் தேவை இதை நம்பியே உள்ளதால், நதிநீரை நிறுத்தினால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என பாகிஸ்தான் மிரட்டியது.

 

”சிந்து நதியில் தண்ணீர் வராவிட்டால் ரத்த ஆறு ஓடும்” என பிலாவல் பூட்டோ மிரட்டல் விடுத்தார். ஆனாலும் இந்திய அரசு நதிநீரை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. 

 

இந்நிலையில் சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாகிஸ்தான் ராணுவ லெப்டினெண்ட் ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரி “நீங்கள் எங்கள் தண்ணீரை நிறுத்தினால், நாங்கள் உங்கள் மூச்சை நிறுத்துவோம்” என மிரட்டும் வகையில் பேசியுள்ளார்.

 

தற்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் இந்திய அரசியல் தலைவர்கள் எதுவும் பேசுவதில்லை. ஆனால் பாகிஸ்தான் தரப்பில் தொடர்ந்து இந்தியாவை அச்சுறுத்தும் வகையில் பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பஸ் ஓடிக்கொண்டிருந்தபோது டிரைவருக்கு நெஞ்சு வலி.. கையால் பிரேக் போட்டு நிறுத்திய கண்டக்டர்..!