Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாகிஸ்தான் பதிலுக்கு தாக்க வாய்ப்பு.. இந்தியாவில் 200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து..!

Advertiesment
flight

Mahendran

, புதன், 7 மே 2025 (16:03 IST)
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத அமைப்புகளை இலக்காக வைத்து இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” என்ற ரகசிய தாக்குதலை நடத்தியுள்ளது. இதில், ஜெய்ஷ்-இ-முகம்மது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் உள்ளிட்ட அமைப்புகளின் முக்கிய முகாம்கள் அழிக்கப்பட்டன.
 
இந்த தாக்குதலுக்கு பதிலாக பாகிஸ்தான் எதிர்வினை காட்டும் வாய்ப்பு இருப்பதால், இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பரபரப்பு நிலவுகிறது. பாதுகாப்பு காரணங்களால் பதான்கோட், ஜம்மு, ஸ்ரீநகர், லே, சண்டிகர், டெல்லி, ஜோத்பூர், அமிர்தசரஸ் உள்ளிட்ட பல விமான நிலையங்களில் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
 
இதன் தாக்கமாக, ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட், ஆகாசா ஏர் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் விமானங்களை தவிர்த்து வருகின்றன. இந்நிலையில், இண்டிகோ நிறுவனம், வடமேற்கு மண்டலத்தில் இயக்கப்படும் 165-க்கும் மேற்பட்ட விமானங்களை மே 10 காலை 5.29 மணிவரை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
 
மேலும், சில வெளிநாட்டு விமான நிறுவனங்களும் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கான சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.
 
இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பயணிகளின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட்டவை என்பதை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பயங்கரவாதிகளை அழித்த பெண் கர்னல் சோஃபியா குரேஷி! - யார் இவர்?