பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் முகாம்களை தேடி அழித்த குழுவின் கர்னல் சோஃபியா குரேஷி தற்போது இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் வீராங்கனையாக மாறியுள்ளார்.
குஜராத்தில் பிறந்த சோஃபியா குரேஷியின் குடும்பத்தினர் பலருமே இந்திய ராணுவத்திற்காக பணிபுரிந்து வந்தவர்கள்தான். கல்லூரியில் முதுநிலை உயிர் வேதியியல் படித்து பட்டம் வென்ற சோஃபியா 1999-ல் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். இந்திய ராணுவ வீரரையே அவர் திருமணமும் செய்து கொண்டார்.
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி குழுவில் 6 ஆண்டுகள் பணியாற்றிய சோஃபியா, 2006ம் ஆண்டில் காங்கோவில் அமைதியை நிலைநாட்ட அனுப்பப்பட்ட குழுவிலும் இடம்பெற்று பல பங்களிப்புகளை செய்துள்ளார்.
2016ம் ஆண்டில் 18 நாடுகள் பங்கேற்ற Exercise Force 18 அணிவகுப்பில் இந்திய ராணுவத்தை வழிநடத்திய இவர்தான், அந்த ஒத்திகையில் ஒரு ராணுவத்தை வழிநடத்திய ஒரே பெண் அதிகாரியும் ஆவார். கார்ப்ஸ் ஆஃப் சிக்னல்ஸ் பிரிவில் தற்போது அதிகாரியாக இருக்கும் சோஃபியா, ஆபரேஷன் சிந்தூரில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
Edit by Prasanth.K