Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆம்னி பேருந்து தீ விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு நிதியுதவி அறிவிப்பு

Advertiesment
ஆம்னி பேருந்து

Siva

, வெள்ளி, 24 அக்டோபர் 2025 (15:37 IST)
ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற ஒரு ஆம்னி பேருந்து திடீரென விபத்துக்குள்ளாகி தீ விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர தீ விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 48-க்கும் மேற்பட்ட பயணிகளில், 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 18 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன், உயிரிழந்தோர் குடும்பங்களுக்குத் தலா ரூபாய் 2 லட்சம் நிதி உதவியை வழங்குவதாக அறிவித்தார்.
 
மேலும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூபாய் 50,000 நிதி உதவி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே, மத்திய அரசும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 2 லட்சம் நிவாரணம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ்.. கையில் எழுதி வைத்து தற்கொலை.