மருத்துவ படிப்பில் அகில இந்திய அளவில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்
மருத்துவ படிப்புக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் உள்பட இந்தியாவில் உள்ள பல முக்கிய கட்சிகள் வலியுறுத்தி வந்தன
இந்த நிலையில் சற்று முன் இதுகுறித்து பிரதமர் கூறியபோது இட ஒதுக்கீடு பிரச்சனைக்கும் உயர் முன்னுரிமை கொடுக்கப்படும் என்றும் இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
இதனை அடுத்து அகில இந்திய அளவில் ஒபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்த மத்திய அரசின் உத்தரவு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்த அரசாணை நேற்று வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது