Publish Date: Mon, 26 Jul 2021 (19:30 IST)
Updated Date: Mon, 26 Jul 2021 (20:44 IST)
சசிகலாவுடன் இணையும்படி டெல்லி தலைமை உத்தரவா? அதிமுகவில் பரபரப்பு!
சசிகலாவுடன் இணையும்படி டெல்லி தலைமை உத்தரவிட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்கள். இந்த பேச்சுவார்த்தையின்போது அதிமுக உட்கட்சி பூசல், சசிகலாவை இணைப்பது, தமிழக அரசியல் நிலவரம் மற்றும் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்பட்டது
குறிப்பாக சசிகலாவை அதிமுகவில் இணைத்துக் கொள்ளும்படியும் அதிமுக பொதுச்செயலாளர் பதவியை அவருக்கு ஒதுக்குமாறு அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
இதனை அடுத்து இனிவரும் காலங்களில் அதிமுக தலைவர்கள் சசிகலா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேச மாட்டார்கள் என்று கூறப்படுகிறது/ மேலும் விரைவில் அதிமுகவில் சசிகலா இணைவார் என்றும் பொதுச்செயலாளர் பதவி ஏற்பார் என்றும் திமுகவுக்கு பெரும் சவாலாக இருக்கும் வகையில் அவர் கட்சியை நடத்துவார் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது