பாஜகவில் இனி 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உயர் பதவி கிடையாது என்ற புதிய கொள்கை அமல்படுத்தப்பட உள்ளதால் அடுத்த தேர்தலில் பிரதமர் பதவிக்கு மோடி போட்டியிட மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இன்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா அவர்கள் வயதை காரணம் காட்டி தான் ராஜினாமா செய்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் பாஜகவின் இனி 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல்வர், பிரதமர், பாஜக தலைவர் உள்ளிட்ட பதவிகள் கிடையாது என கொள்கை வகுக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது
இதனை அடுத்து தற்போது 70 வயதில் இருக்கும் பிரதமர் மோடி வரும் தேர்தலின்போது 73 வயதில் இருப்பார் என்பதால் அவர் பிரதமர் வேட்பாளராக இருக்க மாட்டார் என்று கூறப்படுகிறது
அப்படியானால் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இதனை அடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவின் இந்த கொள்கையை மற்ற கட்சிகளும் கடைபிடித்தால் இளைஞர்கள் நாட்டை ஆளும் வாய்ப்பு கிடைக்கும் என்று நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்