மிசோரம் , மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் இன்று காலை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது. பெரும்பாலான மக்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டுப்போட்டனர். 102 பாட்டி கூட தள்ளாடும் வயதில் குடிமகன் உரிமையை நிலைநாட்டியது ஜனநாயகத்தின் மூலம் பாரத தாய்க்கு பெருமை அளிப்பதாகவே இருந்தது.
இன்று காலையில் இருந்து தொடங்கிய ஓட்டுப்பதிவு மாலை 4 மணி வரைக்கும் தொடர்ந்தது. இந்த தேர்தலில் மிசோரம் மாநிலத்தில் 73 % வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி ஆஷிஷ் குந்த்ரா கூறியுள்ளார்.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள 230 தொகுதிகளில் காலை 8 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுள்ளதாகவும் மவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள தொகுதியில் மட்டும் காலை 7 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை வாக்குபதிவு நடந்ததாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தேர்தலில் 65.5 % வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும் இன்றையை வாக்குபதிவு கடந்த 2013 ஆம் ஆண்டின் வாக்குபதிவை விட 7 % குறைவு என்று கூறப்படுகிறது.