ஜம்மு காஷ்மீர் சட்டசபை சற்றுமுன் திடீரென கலைக்கப்பட்டது. இதனால் அந்த மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் ஆட்சியமைக்க முன்னாள் முதல்வர் மஹபூபா முப்தி அவர்களும், பாஜக கூட்டணி சார்பில் சஜ்ஜத் லோனேவும் ஆட்சியமைக்க தனித் தனியாக உரிமை கோரியதை அடுத்து சற்றுமுன் திடீரென சட்டசபையைக் கலைத்து ஆளுநர் சத்ய பால் மாலிக் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தேசிய மாநாடு மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சியமைக்க மஹபூபா திட்டமிட்டார். அதேபோல் பாஜக சார்பில் சஜ்ஜத் லோனேவும் ஆட்சியமைக்க போட்டி போட்டதால் இருவரும் ஆட்சி அமைக்க முடியாத வகையில் கவர்னர் சட்டசபையை கலைத்துவிட்டார்
இந்த நிலையில் ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் விரைவில் தேர்தல் அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.