Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தீர்த்துக் கட்டுன டயர்ட்ல டீ போட்டு குடிச்சோம்: கொலையாளி பகீர் வாக்குமூலம்

தீர்த்துக் கட்டுன டயர்ட்ல டீ போட்டு குடிச்சோம்: கொலையாளி பகீர் வாக்குமூலம்
, வியாழன், 22 நவம்பர் 2018 (16:46 IST)
புதுவையில் நேற்று நடைபெற்ற கொடூர கொலை சம்பவத்தில் பிடிபட்ட கொள்ளையர்கள் அதிரவைக்கும் விதமாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
 
புதுவை நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் வக்கீல் பாலகிருஷ்ணன்(72). இவரது மனைவி ஹேமலதா(65). இவர்களது இரு மகன்களும் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால் இருவரும் வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.
 
இந்நிலையில் நேற்று முன் தினம் இருவரும் வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். பணம், நகைக்காக இருவரும் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இதுகுறித்து விசாரிக்க போலீஸார் பல்வேறு தனிப்படைகளை அமைத்து விசாரித்து வந்தனர். விசாரணையில் பாலக்கிருஷ்ணனின் கார் டிரைவரே இந்த கொலையை அரங்கேற்றியது தெரிய வந்தது.
 
இதனையடுத்து அவனை பிடித்து போலீஸார் விசாரித்தனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது. வக்கீல் வசதியானவர் என்பதால் என் நண்பருடன் அவர் வீட்டில் நுழைந்து இருவரையும் கொலை செய்தோம். கஷ்டப்பட்டு கொலை செய்தது மிகவும் கலைப்பாக இருந்தது. இதனால் கிட்சனுக்குள் சென்று இருவரும் டீ போட்டு குடித்தோம். பின்னர் அங்கேயே சிறுநீர் கழித்தோம் என வாக்குமூலம் அளித்துள்ளான். போலீஸார் அவனிடம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கை போரில் எத்தனை மக்களைக் கொன்றார்களோ ... ஆயிரமாயிரம் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு...